அட்டப்பள்ளம் விநாயகருக்கு பைசல் எம்.பி ஒதுக்கிய நிதியில் போட்டோ பிரதி இயந்திரம்

அம்பாறை மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேச பாடசாலையான அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்துக்கு பைசல் காசிம் எம். பி அவருடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை பெற்று கொடுத்து உள்ளார்.

 
இவர் இப்போட்டோ பிரதி இயந்திரத்தை அதிபர் எஸ். ரகுநாதனிடம் கடந்த திங்கட்கிழமை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
 
இதை ஒட்டி இப்பாடசாலையின் கல்வி சமூகத்தால் இவருக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. இவர் இங்கு உரையாற்றியபோது இவருடைய தொகுதியில் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் எல்லோருக்கும் சேவை ஆற்றி வருகின்றார் என்றும் இப்பாடசாலைக்கு நிரந்தரமான கூட்ட மண்டபம் தேவையாக உள்ள நிலையில் வருங்காலத்தில் அதை பெற்று கொடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts