அட்டாளைச்சேனையில் மாகாண மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள்

(எம்.ஏ.றமீஸ்)
 
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகரார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது என அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலை விளையாட்டு வேலைத் திட்ட இணைைைப்பாளர் ஏ.எல்.பாயிஸ் தெரிவித்தார்.
 
மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். இப்போட்டிகளை நடந்துவதற்காாவதற்கான பூர்வாாங் க ஏற்பாடுகளை அக்கரைப்பற்று கல்விவலயம் மேற்கொண்டு வருகிறது.
 
கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களை பிரதிநிதித்துவப் படுத்தி சுமார் ஆறாயிரம் மாணவர்கள் இப்போட்டிகளுக்காக கலந்து கொள்ளவுள்ளனர். ஏழு போட்டிப் பிரிவுகளில் கலந்து கொள்வதற்காக 469 மாணவர் குழுக்கள் இதற்கான தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
 
மாகாண மட்டப் போட்டிகளின் முதலாம் நாள் போட்டிகளாக தரம்-03, தரம்-04 ஆகிய மாணவர்களுக்கிடையிலான ஆண்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் பெண்கள் கலவன் அணிகளுக்கான போட்டிகளும், இரண்டாம் நாள் போட்டிகளாக தரம்-04 மற்றும் தரம்-05 மாணவர்களுக்கிடையிலான ஆண்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் பெண்கள் கலவன் அணிகளுக்கான போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this...
Share on Facebook
Facebook

Related posts