அதிகூடிய விருப்பு வாக்கு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ பெற்றுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 6 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், நாமல் ராஜக்பக்ஷ 166,660 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதையடுத்து, டி.வி.ஷானக்க 128,805 வாக்குகளையும், மஹந்த அமரவீர 123,730 வாக்குகளையும், உபுல் கலப்பந்தி 63,369 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அஜித் ராஜபக்ஷ 47,375 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அந்த ஆசனத்தை 25,376 விருப்பு வாக்குகளைப் பெற்ற வெதயாரச்சி வென்றுள்ளார்

Share this...
Share on Facebook
Facebook

Related posts