இன்று புதுநகரில் ஆரம்பகல்வி கற்றல்வளநிலையம் திறப்புவிழா

(காரைதீவு நிருபர்சகா)
 

கல்வியமைச்சின் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற திட்டத்தின்கீழ் சம்மாந்துறைவலய மல்வத்தை புதுநகரம் அ.த.க.பாடசாலையில் நிருமாணிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி கற்றல்வளநிலையத்திறப்பு விழா இன்று(10)  செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

 
பாடசாலை அதிபர் நல்லரெத்தினம் சுந்தரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இத்திறப்புவிழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
 
கௌரவ அதிதிகளாக மேற்படி திட்டத்தின் பணிப்பாளர் கே.பத்மநாதன் சம்மாந்துறைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் திட்டத்திற்கான கிழக்குமாகாணப் பொறியியலாளர் ரி.அருள்ராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பிப்பார்கள்.
 
1கோடி 60லட்சருபா செலவில் இவ் ஆரம்பக்கல்வி கற்றல்வளநிலையம் நிருமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Share this...
Share on Facebook
Facebook

Related posts