இளம் யுவதி,இளம் குடும்பஸ்தர் ஒரேகிராமத்தில் தூக்கிட்டு தற்கொலை

கொத்தியாவலையில் சோகச்சம்பவம்வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தியாவலை கன்னங்குடா பிரதேசத்தில்; கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை வெய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
கொத்தியாவலை,கன்னங்குடா பிரதேசத்தில் வசித்துவரும் திசவீரசிங்கம்-பத்மப்பிரியா(21) மற்றும் கந்தையா-இளங்கோ (35) ஆகிய இருவருமே தங்களது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுள்ளனர்.சம்பவத்தை கண்ட குடும்பத்தினர் அருகில் உள்ள தாண்டியடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர்.
 
மட்டக்களப்பு நீதிமன்ந நீதவான் அவர்களின் பணிப்புரைக்கமைய மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் அவர்கள் இருவரினரும் சடலங்களை பார்வையிட்ட பின்னர் சடலங்களை பிரேர பரிசோதனை செய்ய மட்டக்களப்பு போதனா வைத்தியவாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிடடார்.பின்னர் பிரேர பரிவோதனைக்கு பின்னர் இருவரினதும் சடலங்கள் உறவினர்களின் விசாரணைக்கு பின்னார் அவர்களிடம் கையழிக்கப்பட்டது.
 
மரணமடைந்த யுவதி குறிஞ்சாமுனை வலயக்கல்வி அலுவலகத்தில் பயிலுனராக கணனி இயக்குனராக கடமையாற்றி வருகின்றார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்    
 
 
 
Share this...
Share on Facebook
Facebook

Related posts