இ.கி.மிசன் இலங்கைத்தலைவர்சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ காரைதீவு விஜயம்.

உலகளாவிய இராமகிருஸ்ணமிசனின்இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் நேற்று(12)மாலை காரைதீவுக்கு விஜயம் செய்தார்.
 
அவருடன் இ.கி.மிசனின்மட்டு.மாநில மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ உதவி மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவனானந்தா ஜீஆகியோரும் விஜயம் செய்தனர்.
 
அவர்கள்கண்ணகைஅம்மனாலயத்தில் வரவேற்கப்பட்டு விசேடபூஜையுடன்அங்கிருந்து அம்மனின் திருவுருவப்படத்துடன்காரைதீவில் அண்மையில் மூடப்பட்ட இ.கி.மிசன்சாராதா சிறுமியரில்லத்திற்கு விஜயம் செய்தனர்.
 
அங்கு அம்மனின் திருவுருவப்படம் வைத்து தீபாராதனைகாட்டப்பட்டுபுஸ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மிசன்பக்தர்கள்மத்தியில் இலங்கைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ உரையாற்றினார்.
 
இ.கி.மிசன்செயற்பாடுகள் இங்கு தொடர்ந்து நடைபெறும்.அதற்கு காரைதீவூர் மக்கள்யாவரும் பூரண உதவி ஒத்தாசை வழங்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts