உலர் உணவுப்பொருட்கள் ஓரு தொகுதி வழங்கிவைப்பு

கொரோனா தொற்றுக்கு   உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேயரில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுயதனிமைக்கு உள்ளாக்கப்பட்ட குடுப்பங்களுக்கும் அது தவிர அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்கின்ற குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் ஓரு தொகுதியினை  (24) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
 
இப்பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய உதவும் கரங்கள் (Helping Hand ) எனும் அமைப்பின் பணிப்பாளர் ஜீ.சுரேன் அவர்களால் ஒரு தொகுதி உணவுப்பொருட்களை வழங்கிவைத்தார். இவ்வாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட செயலகத்துடன் அல்லது பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொண்டு பொருட்களை வழங்க முடியும் என அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்துள்ளார்
 
 
இவ்வாறான இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் நிலையறிந்து உதவ வருகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாராட்டியே ஆகவேண்டும் என தெரிவித்தார் அரசாங்க அதிபர் 
Share this...
Share on Facebook
Facebook

Related posts