எரிப்பொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கும் விலை சூத்திரம் குறித்து ஆராயும் குழு

எரிப்பொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கும் விலை சூத்திரம் குறித்து ஆராயும் குழு இன்று கூடவுள்ளது. 
 
ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி குறித்த குழு கூடி எரிப்பொருள் விலை தொடர்பில் ஆராய்ந்து வருகிறது. 
 
ஆனால் இந்த மாதம் 10 ஆம் திகதி விடுமுறை என்பதால் குறித்த குழு கூடவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று அந்த குழு கூடவுள்ளது. 
 
கடந்த மாதம் கூடிய எரிப்பொருள் விலை தொடர்பில் ஆராயும் விலை சூத்திர குழு எரிப்பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்தது. 
Share this...
Share on Facebook
Facebook

Related posts