ஏறாவூர் பற்று பிரதேச பெரும்போக பயிற்செய்கை ஆரம்ப கூட்டம்

(த.தவக்குமார்)

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச பெரும்போக பயிற்செய்கை ஆரம்ப கூட்டம் நேற்று  (திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் ச.சுதர்சினி  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசன மானாவாரி கண்டங்களில் நெற்பயிற்செய்கை செய்வது தொடர்பாகவும் கால்நடைகளை வெளியேற்றுதல் உரமானியம் பயிர்காப்புறுதி மற்றும் வங்கிக்கடன்கள் தொடர்பாக ஆராயப்பட்டது

 

இம்முறை பெரும்போகம் பயிற்செய்கைக்கு என ஏறாவூர் காயாற்குடா இகமநல சேவை பிரிவில் மானாவாரி நெற்செய்கைக்காக 2755 ஏக்கர்களும் உருகாமம் இகித்துள்இ மற்றும் வெளிக்காகண்டி ஆகிய பகுதிகளில் 9104 ஏக்கர்களும் கரடியனாறு கமநல சேவை பிரிவில் மானாவாரியின் கீழ் 13853 ஏக்கர்களும் வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தின் கீழ் வருகின்ற மானாவாரி செய்கைக்கு என 13065 ஏக்கர்களும் பயிற்செய்கை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.மொத் தமாக ஏறாவூர்பற்று பிரதேசசெயலக பிர்pவுக்கும் வருகின்ற 3 கமநல சேவைகள் நிலைய பிரிவுகளுக்கும் 38777 ஏக்கர்கள் இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணுவதற்கு பெரும்போக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வருடம் பெரும்போக விவசாய வேலைகள் 2019 செப்டெம்பர் 10ம் திகதி தொடக்கம் இடம்பெறும் எனவும் காப்புறுதி இறுதிதிகதி 2019 நவம்பர் 10ம் திகதி நடைபெறும் என பெரும்போக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத் தில் பிரதேச செயலாளர் N.வில்வரட்ணம் மற்றும் விவசாயப்பபணிப்பாளர் லு.டீ இக்பால் கமநல நிலைய உதவிப்பணிப்பாளர் ளு.ஜெகநாத் விவசாய திணைக்கள விரிவாக்கல் உதவிப்பணிப்பாளர் ஏ.பேரின்பராஜா இவங்கி உத்தியோகத்தர்கள் இநீர்பாசன திணைக்கள அதிகாரி இதேசிய உரச்செயலகம் இவிவசாயகமநல காப்புறுதிசபை இகால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய திணைக்கள தவைவர்களும் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

Share this...
Share on Facebook
Facebook

Related posts