ஐக்கிய ஸஹ்ரியனின் இலவச கருத்தரங்கு

ஐக்கிய சஹிரியன் நட்புறவு அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு15  காலை கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
 
1988-91 காலப்பகுதியில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி பயின்ற நண்பர்கள் ஒன்றிணைந்து ஒருங்கமைத்துள்ள இவ்வமைப்பு பிரதேசத்தில் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துவருகிறது. அதன் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  
 
 
 இந்நிகழ்வில் வளவாளர்களாக  இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக கலை, கலாச்சார பீட பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபுபக்கர், இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் எப்.ஏ.சிப்லி, அம்பாரை ஹாடி உயர்தொழினுட்ப கல்வி நிருவக முகாமைத்துவ பிரிவின் தலைவர் எஸ். தொய்பிக், அட்டாளைசேணை தேசிய கல்வியல் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ. ஏ. ரமீஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts