ஐநா வில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு வழங்கியுள்ள இரு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மிகுதி இருக்கும் ஒரு வருடத்தையும் மீள வழங்குவதில் எவ்வித நியாயப்பாடும் இல்லை. இதனை வலியுறுத்தும் முகமாக வடக்கு கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியை நடாத்தவுள்ளோம் என வடக்கு கழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
 
இவ் ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
 
30(1) தீர்மானத்தில் உள்ளக விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர எந்தவொரு இடத்திலும் கலப்பு நீதின்றம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை. உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலை ஏற்படப்போவதில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றாவது தடவையாகவும் வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தின் ஒரு வருடம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாவது வருடத்தை வழங்குவதில் எந்தவொரு நியாயப்பாடும் இல்லை என்பதைப் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.
 
நிறுவப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகமானதும் ஒரு கண்துடைப்பாகும். பொறுப்புக் கூறலும், தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் குற்றவியல் விசாரணையானது  சர்வதேச குற்றவியல் விசாரணை மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசே தீர்ப்பாயத்தினூடாகவோ விசாரணை செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐநா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கு கொள்ளும் உறுப்பு நாடுகளை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
 
இதனை வலியுறுத்தும் முகமாக பாதிக்கப்;பட்ட மக்களாகிய நாம் எமது வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியை நடாத்தவுள்ளோம். 
 
ஸ்ரீலங்கா அரசு தமிழ்த் தேசத்தை அழித்து ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தானதாக மாற்றியமைக்க அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளும் இலங்கைத் தீவு பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றனர். 2009ல் தமிழினப் படுகொலையுடன் போர் நிறைவுக்கு வந்தன. அத்தகு தமிழினப் படுகொலை நடைபெற்ற போது அதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் மட்டுமல்லாது சிங்கள தேசத்தைப் பிரதநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச தரப்புகளும் முயன்றன. 
 
ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒட்டுமெத்த செயற்பாடுகளும் சிங்கள தேசத்தின் நலன்களைப் பேணும் முகமாகவே இருக்கின்ற நிலையில் எதிர்காலத்திலும் இதே சூழலே அமைந்திருக்கும். இந்தச் சூழலில் தமிழ் மக்கள் தமிழினப் படுகொலைக்கு நீதி கோருவதோ போர்க்குற்றத்திற்கு எதிராக நீதி கோருவதோ, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோருவதோ ஸ்ரீலங்கா அரசின பங்களிப்போடு ஒரு போதும் நடைபெறப் போவதில்லை. 
 
2012 தொடக்கம் ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டிPக்கும திர்மானங்கள் அனத்தும் ஸ்ரீலங்கா அரசைக் கொண்டே பொறுப்புக் கூற வைக்கும நிகழ்ச்சி நிரலாகவே இருக்கின்றன. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியாகவே முடியும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பாகிய நாங்கள் தெரிவிக்கின்றோம். 
 
தற்போது ஐநா மனித உரிமைப் பேரவைத தீர்மானம் 30(1) வரை வந்துள்ளது. இத்தீர்மானம் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணையை வலியுறுத்துவதாகவே உள்ள நிலையில் இதனைப் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் நிராகரித்தே வந்திருக்கின்றோம். இதன் மூலம் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகமும் ஒரு கண்துடைப்பானதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகளைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடாகவே இருக்கின்றது. 
 
கடந்த ஐந்து வருடங்களாக அரசாங்கம் நாம் ஏற்றுக் கொள்ளும் தீர்வை வழங்கவில்லை என்பதுடன் அது தீர்வை வழங்குவதற்குத் தயாரில்லை என்பதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர். தற்போது வந்துள்ள அரசாங்கம் இந்த 30(1) தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு வழங்கியுள்ள இரு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மிகுதி இருக்கும் ஒரு வருடத்தையும் மீள வழங்குவதில் எவ்வித நியாயப்பாடும் இல்லை என்று தெரிவித்தார்கள். 
Share this...
Share on Facebook
Facebook

Related posts