ஐரோப்பாவின் உயரமான ரஷ்யாவிலுள்ள எல்ப்ரஸ் மலை ஏறும் கிழக்கின் முதல் மட்டு. மைந்தன்.

(எஸ்.சதீஸ்)
ஜனாதிபதி விருது பெற்ற சாரணிரும் மட்டக்களப்பு புpத மிக்கேல் கல்லூரியின்  மாணவனான அமலநாதன் சஞ்சீவன் ஐரோப்பாவின் உயரமான மலையான ரஷ்யாவிலுள்ள எல்ப்ரஸ் மலை ஏறுவதற்காக பயணமானார்.
 
ரஷ்யாவிலுள்ள எல்ப்ரஸ் மலையில் ஏறி அதன் உச்சியில் உலக சாரணக் கொடி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிக் சிவப்பு நீல வர்ணக் கொடியையும் பறக்கவிடவுள்ளார். 
 
இவருடைய இந்த மலையேறும் பயணத்திற்கான வாழ்த்தினை மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன் மற்றும் உதவி மாவட்ட சாரண ஆணையார் (நிருவாகம்) ஐ.கிரிஷ்றி ஆகியோர் உலக சாரண கொடியை வழங்கி வைத்து வாழ்த்தினர்.
 
5642 மீற்றர் உயரமான இந்த மலையை வருடத்துக்கு 15 – 20ஆயிரம் பேர் ஏறிவருகின்றனர். இலங்கையர்களும் பலர் ஏறிள்ள போதும், கிழக்கிலிருந்து செலலும் முதலாவது நபர் என்பதுடன், மட்டக்களப்பிலிருந்தும் முதலாவதாக செல்பவராகும். 
 
இவர் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் நல்லெண்ண நோககமாக பருதித்தித் துறையிலிருந்து மாத்தறை வரை நடைப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
அமலநாதன் சஞ்சீவனின் இந்தத் துணிகரப் பயணம் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம். 
 
Share this...
Share on Facebook
Facebook

Related posts