கல்முனை சதுக்கத்தில் மூன்றாவது வருடமாகவும் கலைகட்டிய தமிழரின் பொங்கல் விழா !!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை மன்றத்தின் தலைவர் திரு.ந.சங்கீத் தலைமையில்  15 காலை 9 மணிக்கு பொங்கல் விழாகல்முனை மாநகரின் மத்தியில்   மூன்றாவது வருடமாகவும் சிறப்பாக நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் அம்பாறை  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன், கல்முனை உப பிரதேச செயலக உப பிரதேச செயலாளர் திரு.ரி.ஜே. அதிசயராஜ் ,கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திரு.இரா.முரளிஸ்வரன்,  அம்பாறை பிரதேச விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி திரு பிரசாத் உதேச கொடித்துவக், கல்முனை இராணுவ முகாம் 2ம் கட்டளை அதிகாரி திரு மேஜர்.ஏஸ்.எச்.சுதுசிங்க , கல்முனை விகாராதிபதி சங்.ரண்முத்துக்கல தேரர், கிறிஸ்தவ மத பெரியார்கள், கல்முனை மாநகர சபை பொறியியலாளர் திரு.சத்தியானம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
புதிய பாத்திரத்தில் பொங்கல் பொங்கப்பட்டு, உழவர்களின் தோழனான எருதுகள் அலங்கரிக்கப்பட்டு எல்லோரும் மகிழ்வுடன் தைப்பொங்கலை கொண்டாடினர்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts