கல்விச் சேவையில் இருந்து அதிபர் மனோகரன் ஓய்வு

பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மெதடிஸ்தன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர்  குஞ்சித்தம்பி மனோகரன் தனது 31 வருடக் கல்விச் சேவையில் இருந்து 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஓய்வு பெறுகின்றார்.

இவர் மட்டக்களப்பு துறைநீலாவணையினைச் சேர்ந்தவராக இருப்பதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியல் துறைச் சிறப்புப் பட்டதாரியான இவர் முதலாவதாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்றார்.

 பின்னர்  ஆசிரியராக வெல்லாவெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் 1988 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு பின்னர் துறைநீலாவணை மகாவித்தியாலயம், களுதாவளை மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும் 2005 ஆம் ஆண்டில் இருந்து பட்டிருப்புக்கல்வி வலயத்தில் உள்ள மண்டூர் 16 ஆம் கொளனி அ.த.பாடசாலை, மாலையர் கட்டு அ.த.பாடசாலை, துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபராகச் சேவையாற்றி 2014 இல் இருந்து துறைநீலாவணை மெதடிஸ்தன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் இதுவரைக்கும் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

துறைநீலாவணை மகாவித்தியாலயம்,நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம் மற்றும் கமுஃ கார்மேல் பாற்ரிமாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர்

 துறைநீலாவணைக் கண்ணகியம்மன் ஆலயத்தின் தலைவராகவும் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியதுடன் இன்னும் பல பொது அமைப்புக்களின் ஆலோசகராக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share this...
Share on Facebook
Facebook

Related posts