காத்தான்குடியில் மூன்றாவது நாளாகவும் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் மூன்றாவது நாளாகவும் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஆறாம் குறிச்சி பகுதியில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி வழிகாட்டலின் கீழ் பொலிசார், இராணுவம் மற்றும் அதிரடிபடையினர் இணைந்து சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகள் இன்று முன்னெடுத்தனர்

இன்று காத்தான்குடி ஆறாம் குறிச்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான வீடுகள் சோதனையிட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் கருத்துக்கள் வழங்கிய நபர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி தெரிவித்தார் .

 சுற்றிவளைப்பின் போது காத்தான்குடி நூரானிய்யா மையவாடி பகுதியில் இருந்து ஆயுத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் இதன்போது மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ,பவர் சப்ளை செட் மூன்று ஜாஜர் இன்டெர் கோம் செட் வாள் , இரண்டு கையடக்க தொலைபேசிகள் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி தெரிவித்தார் 

Share this...
Share on Facebook
Facebook

Related posts