காரைதீவில் ஆழ்கடல் கரைவலை மீன்பிடிக்கு 3நாட்கள் தடைகாரைதீவு பிரதேசசபைத்தவிசாளா ஜெயசிறில் கூறுகிறார்.

காரைதீவு பிரதேசத்திற்குட்பட்டபகுதிகளில் ஆழ்கடல் கரைவலைமீன்பிடி  மற்றும் அங்காடிக்கடைகளுக்கு எதிர்வரும் மூன்றுதினங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
 
காரைதீவைச்சுற்றியுள்ள கிராமங்களில் கொரோனத் தொற்று உறுதிசெய்யப்ட்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் சில கட்டுப்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய கட்டத்தில் நாமிருக்கிறோம்.
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய ஆபத்தான நிலையிலுள்ளோம்.மீன்வாடிகள் மின்விற்பனை நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் 3தினங்களுக்கு மூடப்படவேண்டும். வெளியிடங்களிலிருந்தும் உள்ளூரிலிருந்தும் பிரதானவீதிகளில் அங்காடிக்கடைகள் நடாத்துவோரும் 3தினங்களுக்கு கடைகளை மூடிவிடவேண்டும் எனவும் கொரோனாக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
பொதுமக்கள் ஒன்றுகூடும் கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற அனைத்தும் இன்று(25) தொடக்கம் 27ம் திகதி வரை தடைசெய்யப்பட்டுள்ளது. முகக்கசவமில்லாமல் யாராவது தெருவில் கண்டுபிடிக்கப்பப்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். சுhதாரநடைமுறை விதிகளைப்பின்பற்றவேண்டும. அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேறவேண்டாம். என்றும் கேட்டுள்ளார்.
 
பேலியகொட பொத்துவில் வாழைச்சேனை போன்ற இடங்களுக்குச்சென்றுவந்த மீனவர்கள் வியாபாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அறியத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts