காரைதீவில் இளைஞர்அணிதேர்தலில் அஜித்குமார் தெரிவு!

காரைதீவுப் பிரதேசஇளைஞர்பாராளுமன்ற உறுப்பினராக செல்வன் சி.அஜித்குமார் 335வாக்குகளைப்பெற்றுத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 
தேசிய இளைஞர் பாராளுமன்றத்திற்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து தேர்தலூடாக இளைஞர்கள்தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
 
காரைதீவுப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இளைஞர்கழகங்களுக்கிடையிலானஇளைஞரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரதேசசெயலகத்தில்  நடைபெற்றது.
 
போட்டியிட்ட சி.அஜித்குமார் 335வாக்குகளையும் எ.எம்.நிஜாத் 188 வாக்குகளையும் ம.சிந்துஜன் 26வாக்குகளையும் பெற்றனர்.
 
அதன்படி சி.அஜித்குமார் காரைதீவு பிரதேசசெயலகம்சார்பில் தெரிவானார்.
 
பிரபலமான வேகப்பந்து வீச்சாளரான சி.அஜித்குமார் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் முக்கியபந்துவீச்சாளராவார்.
 
கடந்தவருடம் நடைபெற்ற எயார்ரெல் வேகப்பந்துவீச்சுப்போட்டியில்தேசியமட்டத்தில் தெரிவானவர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this...
Share on Facebook
Facebook

Related posts