கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை 3-1(அ) தரத்துக்கு மாவட்ட ரீதியாகப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவென, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம், நேற்று (16) தெரிவித்தார்.

இதற்காக, கிழக்கு மாகாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட பட்டதாரிகளிடமிருந்தும், மேலதிகமாக பதுளை, அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் ஆகக் குறைந்தது 03 வருட வதிவிடமாகக் கொண்ட பட்டதாரிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணபதாரர்கள், எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியன்று 18 வயதுக்குக் குறையாதவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராவும் இருத்தல் வேண்டுமெனவும், விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்பதாக ஆகக் குறைந்தது 03 வருடமாவது தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் வசித்திருத்தல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சகல விண்ணப்பதாரர்களும், விண்ணப்பப் படிவத்தை அனுப்புவதற்கு முன்னர் http://www.ep.gov.lk/en/recruitmentssub  என்ற இணையத்தளத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, 2019.01.04 திகதிக்கு முன்னர் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், இல.198, உட்துறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Share this...
Share on Facebook
Facebook

Related posts