கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் புதிய செயலாளராகதிருமதி கலாமதி பத்மராஜா

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னால் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா நேற்று (11) காலை தனது புதிய கடமையினை கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்பாசன விலங்கு உற்ப்பத்தி கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயாலாளராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
 
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல அபிவிருத்தி பணிகளில் பாரிய பங்கெடுத்து சிறப்பான செவையாற்றிய பெருமை என்றும் அவருக்குண்டு மட்டக்களப்பு மக்களை நேசிக்கின்ற ஒரு சிறந்த நிர்வாக அதிகாரியாக தனது கடமைக்காலங்களில் செயல்ப்பட்டமை யாராலும் மறுக்கமுடியாது.
 
தனது பதவிக்காலங்களில் மாவட்டத்தில் சட்ட விரோதமான மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு சிறந்த பொறிமுறையினை கையான்டு செயல்ப்படுத்தியது நுண்கடன்களை மாவட்டத்தில் தடைசெய்து ஏழை மக்களுக்கு சமுர்திக்கடன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை கொரோனா காலங்களில் மக்களின் தேவை உனர்ந்து நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Share this...
Share on Facebook
Facebook

Related posts