கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பு – வாவிக்கரை பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்பு, காணி, நிர்வாகம், பொருளாதாரம், தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமை ஆகியவற்றிலிருந்து கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற கோட்டாபய ராஜபக்ஸவிற்கே முடியும் என்ற நிலையில், தாம் அவருக்கு ஆதரவு வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts