சம்மாந்துறை வலயத்தில் இருபாடசாலைகள் மூடப்பட்டன!

சம்மாந்துறை வலயத்தில் இரு பாடசாலைகள் (11) திங்கள் மூடப்பட்டதாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.
 
வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளிக்கோட்டத்தைச்சேர்ந்த 15ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயம் மற்றும் அன்னமலை சிறி சக்தி வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளே மூடப்பட்டன.
 
விவேகானந்த மகா வித்தியாலயம் கொரோனாத் தொற்று காரணமாகவும் சிறிசக்திவித்தியாலயம் வெள்ளம் காரணமாகவும் மூடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் பெற்றோரது சிரமதானம் நடைபெற்றது. சிரமதானத்திற்கு வந்திருந்த பெற்றோர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அப்பாடசாலை மூடப்பட்டது
 
அதிகவெள்ளம்காரணமாக தாழ்நிலப்பிரதேசத்திள்ள அன்னமலை சிறிசக்தி வித்தியாலயம் மூடப்பட்டுள்ளது.
இவ்விரு பாடசாலைகள் மீளத்திறப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படுமென்று பணிப்பாளர் நஜீம் மேலும்சொன்னார்.
 
ஏற்கனவே சம்மாந்துறை வலயத்தில் தாருஸ்சலாம் மகா வித்தியாலயம் மற்றும் குடுவில் ஹிறா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகள் கொரோனாவினால் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டமை தெரிந்ததே.
Share this...
Share on Facebook
Facebook

Related posts