சீர்பாததேவி பாடசாலை வரலாற்றில் முதல்தடவையில் 3பேர் சித்தி.

சம்மாந்துறை வலயத்திலுள்ள மல்வத்தை  சீர்பாததேவி வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையில் நேற்று வெளியாகிய தரம்5புலமைப்பரிசில்பரீட்சை முடிவுகளின்படி மூன்று மாணவாகள்; சித்திபெற்றுள்ளனர்.
 
மாணவிகளான சிவருபன் ஜினோதிகா(174புள்ளி) சுவேந்திரன் விதுர்சனா(162புள்ளி) ஜெயச்சந்திரன் தருணிகா(156புள்ளி) ஆகியோரே இவ்விதம் வரலாற்றுச்சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 6ஆண்டுகளில் இம்முறை முதற்தடவையாக  மாணவர்கள் தோற்றினர். அவர்களுள் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்று சித்திபெற்றுள்ளனர் என்று அதிபர் திருமதி ரஜனி சிறியானந்தமூர்த்தி தெரிவித்தார்.
 
இங்கு தோற்றிய 21 மாணவர்களில் 3பேர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றும் 14பேர் 70க்குமேல்பெற்றும் 4பேர் 70க்கு கீழ்பெற்றுமுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பின்தங்கிய பிரதேசத்தில் மிகவும் அடிப்படைவசதியற்ற மாணவர்கள் வசதீயீனங்களுக்குமத்தியில் கல்விகற்றும்இப்பாடசாலை அண்மையில் பெயய்தமழையால் வெள்ளம் சூழந்து முதலைகளின் நடமாட்டம் இருப்பதாகவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமிருப்பதாகவும் சொல்லப்பட்டது தெரிந்ததே.
தரம்1 முதல் தரம் 5வரையுள்ள இப்பாடசாலை 2015ஆம் ஆண்டு அப்போதைய கிழக்கு மாகாண கல்விஅமைச்சர் சி.தண்டாயுதபாணியால் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this...
Share on Facebook
Facebook

Related posts