சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் ச.சுபாஸ்கோ அவர்களால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிச்செயலாளர் சமூகசேவகர் ச.சுபாஸ்கோ அவர்களது நிதியின் மூலம் 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று 22 ஆம் திகதி  சனிக்கிழமை இடம்பெற்றது.

சுபாஸ்கோ அவர்களது தாயாரின்  1 ஆம் ஆண்டு நினைவினை முன்னிட்டு இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த உதவியினை மட்டக்களப்பு திராய்மடு மற்றும் சுவிஸ் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சுபாஸ்கோ அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பிரதிச் செயலாளர் மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின்  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

Share this...
Share on Facebook
Facebook

Related posts