சுவிஸ் உதயத்தின் தலைவராக சுதர்சன் மீண்டும் தெரிவு

சுவிஸ் உதயத்தின் தலைவராக மீண்டும் முன்னாள் தலைவர் டி.எல்.சுதர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.
சுவிஸ் உதயம் அமைப்பின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் க.சிவஞானசுந்தரம் அவர்களது தன்னிச்சையான செயற்பாடு காரணமாக சுவிஸ் உதயம் அமைப்பின் மத்தியகுழு அவரைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது
அதாவது இவ் அமைப்பானது கடந்த பல வருடகாலமாக பல்வேறு சமூகசேவைகளைச் செய்துவருகின்றது. இந்நிலையில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவரது தன்னிச்சையான செயற்பாடுகளால் சுவிஸ் உதயம் அமைப்பினது நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படாத வகையில் இவ்வருடத்திற்கான தலைவராக சுதர்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts