சுவிஸ் உதயத்தின் பெயரைக் கூறி 7 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற கூட்டத்திற்கும் சுவிஸ் உதயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

 

(சுவிஸில் இருந்து எமது நிருபர்)
சுவிஸ் உதயம் அமைப்பினால் நீக்கப்பட்ட தனிப்பட்ட நபரால் எதிர்வரும் 7 ஆம் திகதி நடாத்தப்பட இருக்கின்ற கூட்டத்திற்கும் சுவிஸ் உதயம் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சுவிஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் தெரிவித்தார்.
சுவிஸ் உதயம் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றது. இவ் அமைப்பை வைத்து தனிப்பட்ட நபர்கள் தங்களது சுயலாபத்திற்காகவும் தன்னிச்சையாகவும் செயற்பட முடியாது.
தற்போது இவ் அமைப்பின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் ஏ.ராஜன் ,பொருளாளர் கே.துரைநாயகம், உபசெயலாளர் சுபாஸ்கோ , உபபொருளாளர் பேரின்பராசா உப தலைவர் கே.தியாகராசா ஆகியோருடன் ஏனைய நிருவாக சபை உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது. இதனைக் குழப்பும் நோக்குடன் சில இணையத்தளத்திற்கு பணத்தினை வழங்கி பொய்யான தகவல்களைப் பிரசுரிக்கின்றனர் அதாவது அந்த இணையத்தளத்திற்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்றார்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts