சுவிஸ் உதயத்தின் பெயரைப் பயன்படுத்தி போலிக் கையொப்பம் இட்டவர்களுக்கு விரைவில் சட்டநடவடிக்கை

சுவிஸ் உதயம் அமைப்பினுடைய வங்கிக்கூற்று அறிக்கையினை post bank தவறுதலாக சுவிஸ் உதயம் அமைப்பில் இருந்து நிறுத்தப்பட்டவர்களின் விலாசத்திற்கு அனுப்பப்பட்டதனை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு எமது அங்கத்தவர்களுக்கு ஒருவருடத்திற்கான வரவு செலவு அறிக்கை எனப் போலிக் கையப்பம் இட்டு அனுப்பியுள்ளனர். இவர்களது இந்த போலி கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட அறிக்கையினை எமது அங்கத்தவர்கள் நம்பவேண்டாம் என சுவிஸ் உதயம் அமைப்பினுடைய தலைவர் டி.எல்.சுதர்சன் தெரிவித்தார்

தவறுதலாக அனுப்பப்பட்ட அந்த வங்கிக்கூற்று அறிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும்  தெரிவிக்கையில் கடந்த ஒருவருடத்திற்கான  ஓராண்டு வங்கிக்கூற்று அறிக்கையினை வழங்குமாறு post bank    இற்கு எமது அமைப்பு எழுத்துமூலம் கேட்டிருந்தது ஆனால் அதனை சுவிஸ் உதயம் அமைப்பின் belp  எனும் புதிய முகவரிக்கு  அனுப்பி வைக்காமல் தவறுதலாக சுவிஸ் உதயம் அமைப்பில் இருந்து கடந்த வருடம்  இடைநிறுத்தப்பட்டவரின் பழைய முகவரிக்கு அவ் வங்கி அனுப்பியிருந்தது.

 இதனைப் பெற்றுக்கொண்டு அமைப்புக்கு பணம் செலுத்தாமல் தலைவர் எனக் கூறிக்கொண்டிருப்பவரும் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட நபர்களும் போலியான கையொப்பத்தினை இட்டு எமக்கு மாதாந்த சந்தா செலுத்துகின்ற அங்கத்தவர்களுக்கு  வரவு செலவை அனுப்பியிருந்தனர் அந்தக் கடிதத்தினைப் பார்த்த எமது அங்கத்தவர்கள் போலியான தகவல் வந்துள்ளமையை எமக்கு அறிவித்தனர் அப்போது post bank   தொடர்புகொண்டு கேட்டபோது  வங்கி பழைய முகவரிக்கு தவறுதலாக அனுப்பியதை அறிந்து அவ் வங்கி எமது அமைப்பிடம் மன்னிப்புக் கோரியது.

அதேவேளை விரைவாக எமது அமைப்புக்கு வங்கிக்கூற்றை அனுப்பி வைப்பதாகத் தெரியப்படுத்தியுள்ளனர் அதனைப் பெற்றதும் நாம் விரைவாக எமது அமைப்பினர்களுக்கு வருடாந்த வரவு செலவு அறிக்கையினை வழங்க இருக்கின்றோம் என்பதுடன்  சரியான முறையில் மக்களுக்குச் சேவை செய்ய சந்த செலுத்தமுடியாத நபர்களால் பதவி ஆசையின் நிமிர்த்தம் போலியான தகவல்களை வெளியிடுகின்றனர்

அதேவளை கிழக்கில் பல உதவிகளை மக்களுக்குச் செய்துள்ளதாக கொக்கரிக்கும் சிவஞானசுந்தரம் மற்றும் ஜெயக்குமார் அதனை பட்டியலிட்டுக்காட்டட்டும் இவ்வாறு போலி விடயங்களை சமர்ப்பித்த இவர்களுக்கு விரைவாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

சுவிஸ் உதயம் அமைப்பு  வங்கிக் கூற்று வழங்கக் கோரிய  கடிதம் 

 

 

 

போலியாக அங்கத்தவர்களுக்கு அனுப்பிய கடிதம்

 

Share this...
Share on Facebook
Facebook

Related posts