சுவிஸ் உதயத்தின் பொதுச்செயலாளர் ராஜன் அவர்களின் முயற்சியால் உதவித்திட்டம் வழங்கிவைப்பு

(சா.நடனசபேசன்)

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை  மணவர்களுக்கும் அங்கு கற்பிக்கின்ற ஆசிரியருக்கும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் உதவி வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் எஸ்.கலைக்குமார் தலைமையில் 22 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை தங்கவேலாயுதபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது 

இதன்போது அப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும்,மாலைநேர வகுப்பில்  கற்பிக்கும் ஆசிரியைக்கு மாதாந்தக் கொடுப்பனவும் அத்தோடு  துவிச்சக்கரவண்டியும் வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அதிதிகளாக சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் ,உபதலைவர் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.வரதராஜன், பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,கணக்குப்பரிசோதகர் எஸ்.நகேந்திரன்,உபசெயலாளர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அதேவேளை இவ் உதவிகளை வழங்கிய சுவிஸ் உதயத்தின் செயற்குழுவிற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
Share this...
Share on Facebook
Facebook

Related posts