சுவிஸ் உதயத்தின் பொறுப்புக்களை கையாளும் உரிமை தலைவர் சுதர்சன் தலைமையிலான நிருவாகமே பொறுப்பு என –நீதிமன்றம் தீர்ப்பு

சுவிஸ் உதயம் அமைப்பினுடைய அனைத்துப்பொறுப்புக்களையும் கையாளும் உரிமை 15 வருடமாக இவ் அமைப்பினை நடாத்திவரும் தலைவர் லிங்கன்.சுதர்சன் தலைமையிலான நிருவாகத்திற்கே உரித்துடையது என சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் லிங்கன் சுதர்சன் தெரிவித்தார்.

சுவிஸ் உதயம் அமைப்பினது புதியநிர்வாக சபை தெரிவுக் கூட்டம்  2019.06.16      திகதி இடம்பெற்றது இதில் ஒருசில தினங்களில் தனிப்பட்ட நபர் சுவிஸ் உதயம் அமைப்பானது ஏழைமக்களுக்கு உதவி செய்வதற்கு உருவாக்கப்பட்ட போது அதனை மறந்து சுவிஸ் உதயம் அமைப்பின் யாப்புகளுக்கு முரணாகச் செயற்பட்டமையினால் அவ் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

 ஆனால் நீக்கப்பட்ட நபர்கள் சுவிஸ் உதயம் தங்களுடையது எனக் கூறிக்கொண்டு பொய்யான தகவல்களை வெளிட்டதுடன் சுவிஸ் உதயம் அமைப்பிற்கு அப கீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். 

அது மட்டுமல்லாது அவர்கள் சுவிஸ் நாட்டினுடைய நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர.; அப்போது அவ் நீதிமன்றம் விசாரணை செய்தது. அதன் பின் இவ் அமைப்பினுடைய அனைத்துப்பொறுப்புக்களும் லிங்கன் சுதர்சன் தலைமையில் இருக்கும் நிருவாக சபையினர்களான செயலாளர் அம்பலவாணர் ராஜன்,பொருளாளர் க.துரைநாயகம் உட்பட உதவித் தலைவர் கே. தியாகராஜா, உதவிச்செயலாளர் ச.சுபாஸ், உதவிப்பொருளாளர் வி.பேரின்பராசா மற்றும் உறுப்பினர்களான    

பி.ஜெயதரன்,எஸ்.வரதராஜன்,பி.எட்வேட்சிறிதரன்,எம்.மதிவதனன்,எம்.பரமேஸ்வரமூர்த்தி,எம்.தருமபாலன்,கே.கஜேந்திரன் நிருவாகமே பொறுப்புடையது என நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பானது 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கல்வி  வாழ்வாதாரம் போன்ற உதவிகளை மேற்கொண்டு வந்த நிலையில்   ஒருசில நயவஞ்சகம் பிடித்த நபர்களின் செயற்பாட்டின் விளைவினால்  சுவிஸ் உதயம் அமைப்பில் 15 வருடமாக சேவைகளை மேற்கொண்ட சுவிஸ் உதயத்தில் ஒருசில  உறவுகள் மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளனர்;. இது தனிபட்ட நபரினை நம்பியமையினால் ஏற்பட்ட விளைவாகும் எனக்குறிப்பிட்டார்.

15 வருடமாக இலங்கையில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் ஒருசில காலங்கள் தடைப்பட்டமைக்கு இவர்களே காரணமாக இருந்தனர் என்பதனை மன வருத்தத்துடன் nதிரிவித்துக் கொள்கின்றேன்

சுவிஸ் உதயம் அமைப்பினுடைய சேவைகளைச் சரியாக முன்னெடுப்பதில் பாரிய இடையூறாக இருந்த நிலையில் மக்கள் சேவைக்காக இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார்.

தலைவர் மேலும் குறிப்பிடுகையில் சுவிஸ் உதயம் அமைப்பையும் அதன் அங்கத்தவர்களையும் அவமானப்படுத்தியமைக்காக மானநஸ்ரம் கோரி நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டார்

அதே வேளை அமைப்பில் இருந்து நீக்கப்படவர்களின் படங்களை மனிதபிமானத்தின் படி நாம் பிரசுரிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் . போலியான கையொப்பங்களை இட்டு உதயம் ஆவணங்களைப் பயன்படுத்தி உதயம் அமைப்பு தங்களுடையது என போலியாக வெளியிட்டு இருந்தனர் இவ் ஆவணங்களும் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதனை அனைத்து உதயம் உறவுகளும் தெரிந்துகொள்ளுமாறு தலைவர் சுதர்சன் தெரிவித்தார்

 

போலியான கையொப்பங்களை இட்டு உதயம் ஆவணங்களைப் பயன்படுத்தி உதயம் அமைப்பு தங்களுடையது என போலியாக வெளியிட்டு இருந்தனர் இவ் ஆவணம்

.

Share this...
Share on Facebook
Facebook

Related posts