சுவிஸ் உதயம் அமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிப் பொருளாளர் பேரின்பராசா அவர்களது மனைவியினால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 22 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு 3  ஆம்திகதி செவ்வாய்க்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

திருமதி வானு பேரின்பராசா அவர்களின் நிதி உதவி மூலம் களுவாஞ்சிக்குடி  முனைத்தீவு மக்களுக்குக்  வாழ்வாதார உதவி வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்;  சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிச் செயலாளர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts