சுவிஸ் உதயம் அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் வழங்கிவைப்பு

(சா.நடனசபேசன்,றமீஸ்,கார்த்திகேசு)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் வசிக்கும் மக்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு  நேற்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

அண்மையில் நாட்டில் பெய்த மழையினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் திருக்கோவில் பகுதியில் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு இவ் அமைப்பினால் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்தப் பொதிகளை சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயம் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பிரதித் தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன், கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,அமைப்பின் உபசெயலாளர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் அவ் அமைப்பின் கணக்குப்பரிசோதகர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டு இவ் நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்தனர்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts