சுவிஸ் உதயம் அமைப்பின் இவ் வருடத்திற்கான நிருவாக சபைக் கூட்டம்

(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பின் இவ் வருடத்திற்கான நிருவாக சபைக் கூட்டம் சனிக்கிழமை 09 ஆம் திகதி  மாலை  சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள சுவிஸ் உதயம் அமைப்பினுடைய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது தலைவர் டி.எல் சுதர்சன் வீடியோ கெண்பிறன்ஸ் மூலம் கூட்டத்தை ஆரம்பித்துவைத்தார் அதன்பின்னர் செயலாளர்  அம்பலவாணர் ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம்,உபதலைவர் காளிக்குட்டி தியாகராசா, உப பொருளாளர் விஸ்வலிங்கம் பேரின்பராசா,நிருவாகசபை உறுப்பினர் கனகசபை கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் .ஏனைய உறுப்பினர்கள் கொவிட் 19 வைரஸ் காரணத்தினால் கொலைபேசியின் மூலம் உரையாடினர்.

இதன் போது கடந்த வருடத்திற்கான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2021 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this...
Share on Facebook
Facebook

Related posts