சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவிக்கு உதவி

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியின் மேலதிக கல்வி நடவடிக்கைக்காக நிதி உதவி இன்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் வசிக்கும் ரவிசங்கர் கிஷாந்தினி எனும் மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தபோது மேலதிக வகுப்புக்களுக்குச் சென்று கல்வியினைத் தொடரமுடியாத கஷ்ட நிலையில் வாழ்ந்து வந்த இம் மாணவி சுவிஸ் உதயம் அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்ததனைத் தொடர்ந்து இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.

சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்து இம் மாணவிக்கு உதவியினை வழங்கியதுடன் மாதாந்தம் கல்வி நடவடிக்கைக்காக நிதி உதவியும் வழங்கப்பட இருப்பதாக சுவிஸ் உதயம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்

Share this...
Share on Facebook
Facebook

Related posts