சுவிஸ் உதயம் அமைப்பின் நிருவாகக் குழுக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் நிருவாகக் குழுக் கூட்டம்  சனிக்கிழமை தலைவர் டி. சுதர்சன் தலைமையில் சுவிஸ் உதயத்தின் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள டிநடி  எனும் இடத்தில் சுவிஸ் உதயத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது  செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் உபதலைவர் கே.தியாகராசா உபபொருளாளர்  வி.பேரின்பராசா  உறுப்பினர்களான வி.ஜெயதரன் ,கே.கஜேந்திரன்,கே.தருமபாலன்,எம்.தியாழகரன்,எஸ்.பரமேஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் சுவிஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் வரவு செலவு ஆராயப்பட்டதுடன்  சுவிஸ் உதயம் அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன அத்தோடு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற உதவித்திட்டம் தொடர்பாகவும் அத்தோடு இலங்கைக்கு வருகை தரவுள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர்கள் உதவிபெறுபவர்களை  சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக்  கிளையின் ஊடக நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Share this...
Share on Facebook
Facebook

Related posts