சுவிஸ் உதயம் அமைப்பின் புதிய நிருவாகத்தெரிவும் 15 வது பொதுக் கூட்டமும்

(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பின் 15  வது பொதுக் கூட்டமும் நிருவாகசபைத் தெரிவும்  ஞாயிற்றுக்கிழமை 16 ஆம் திகதி சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் தலைமையில் சுவிஸ்லாந்தின் வேண்நகரில்  மு.ப 11 மணிக்கு நடைபெற்றது.

இதன் போது சுமார் 15 வருடங்களாக பொதுச் சேவையாற்றிய தலைவர் தனது தலைமையுரையில்  சுவிஸ் உதயம் அமைப்பு கடந்த 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பொது நோக்குடன் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அயராது பாடுபட்டு பல்வேறு சேவையாற்றியுள்ளது. 

இவ் அமைப்பின் இலங்கையின் கிழக்கு மாகாணக் கிளையின் மூலம் வாழ்வாதாரம் கல்வி முன்னேற்றம் போன்றவற்றிற்கு பல உதவிகளைச் செய்து இருந்தோம். தற்போது புதிய நிருவாகம் இச் சேவைகளை ஏற்றுள்ளீர்கள் நீங்களும் இச் சேவைகளை முன்னெடுத்து ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு . நானும் என்னாலான உதவிகளை எவ்வேளையிலும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து  புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. இதில் தலைவராக கே.சிவஞானசுந்தரம், செயலாளராக ராஜன் அம்பலவாணர், பொருளாளராக சமூகசேவகர் கே.துரைநாயகம், உபதலைவராக கே.தியாகராஜா, உபசெயலாளராக எஸ். சுபாஸ்கோ, உப பொருளாளராக வி.பேரின்பராசா, உறுப்பினர்களாக கே.திவாகரன், ஜெசிந்தாஅன்ரன்,வி.கனகசுந்தரம்,வி.எட்வேட்,எம்.மதிவதனன்,எஸ்.வரதராஜன், பி.ஜெயதரன் மற்றும் கணக்காய்வாளர்களாக திருமதி ராதிகா திவாகரன் ,திருமதி சாந்தினி  சிவஞானசுந்தரம் ஆகியோருடன்  சபையோரின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைய அமைப்பை தொடர்ந்தும் வழிநடத்த  சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவராக இருந்து 15  வருடம் சேவையாற்றிய டி.எல் சுதர்சன் அவர்கள் இணைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டார் இறுதியாக செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.


Share this...
Share on Facebook
Facebook

Related posts