செங்கலடியில் பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்து வீசப்பட்டுள்ளது.மட்டக்களப்பு – செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெரியப்பட்டுள்ளதாக ஆலய நிருவாகசபையினர் தெரிவித்துள்ளார்கள்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில்  அமைக்கப்பட்ட பிள்ளையார் சிலையே இவ்வாறு உடைத்தெரியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை இன்று வியாழக்கிழமை(13)காலை 6.00 மணியளவில் உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் பிள்ளையார் சிலையை விசமிகள் அடித்து  உடைத்து வீசியுள்ளதை அவதானித்துள்ளதுடன் ஏறாவூர் பொலிசில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார்கள்.

அவர்கள் தெரிவிக்கையில்  நேற்றிறவு சுமார் 8.00 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் இன்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர்.

மேலும் இவ் வழிப்பிள்ளையார் சிலை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக யுத்தகாலத்தின் முன்னிருந்து வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்ததை துப்பரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.

இப் பிள்ளையார் சிலையை உடைத்தெரிந்த விசக்கிரிமிகள் யாராக இருந்தாலம் தமிழர் வாழும் இப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தனமாக வேலையை செய்வதை இத்துடன் நிறுத்தவேண்டும் எனவும் ,அவ்வாறு நிறுத்தாவிட்டால் யார் என்பதை உலகத்திற்கும்,சமூகத்திற்கும் புடம்போட்டு காட்டுவோம் எனவும் இச்செயற்பாட்டானது மதத்தை முழுமையாக கற்றுக்கொள்ளாத,அறிந்திராத ,மதநல்லிணக்கம் இல்லாதவர்களின் செயற்படாகும் எனவும் உதயசூரியன் உதவிக்குழுவினர் கவலை தெரிவித்தனர்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts