ஞானபீடத்தில் “உலக சேமத்திற்கான பௌர்ணமி தின மகா யாக வழிபாடுகள்

மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்ப ஞானபீடத்தில் “உலக சேமத்திற்கான பௌர்ணமி தின மகா யாக வழிபாடுகள்” இடம்பெற்றது.
 

மட்டக்களப்பு பெரிய உப்போடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் பீடத்தின் குரு முதல்வர் மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமியின் தலைமையில் ஆண்டு இறுதியில் நிகழ்த்தப்பட்ட உலக சேமத்திற்கான பௌர்ணமி தின மகா யாக வழிபாடுகள் பக்தர்கள் புடைசூழ மிகவும் பக்திபூர்வமாக புதன்கிழமை(11)இடம் பெற்றது.

ஸ்ரீ பேரின்ப ஞானபீடத்தில் பூஜை,பிரார்த்தனை,யாக வழிபாடு,ஆன்மீக அருள் உபதேசம்,அன்னதானம்,குருபகவானின் ஆசீர்வாதம் என்பன பௌர்ணமி யாக வழிபாடு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அடியார்கள் பேரானந்த பெருவெள்ளத்தில் திளைத்திருந்தார்கள்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts