தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளைப் போல வெறுமனே ஒரு அரசியற் கட்சி அல்ல. அது ஒரு விடுதலை இயக்கம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளைப் போல வெறுமனே ஒரு அரசியற் கட்சி அல்ல. அது ஒரு விடுதலை இயக்கம். மனித உரிமைகளை வென்றெடுத்தல் என்ற இலக்கிலே செயற்படுகின்ற ஒரு இலட்சிய இயக்கம்

 என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கிழக்கு மாகாணம் – களுவாஞ்சிக்குடி, இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வேடிக்கைக்காகவும், தாழ்வு மனப்பான்மையிலும், கற்பனாவாதத்திலும் மக்கள் மத்தியிலே பரப்பப்படும் கருத்துக்கள் நம் இனத்தைப் பலவீனப்படுத்தும் என்பதனை இனத்தின்பால் அக்கறை கொண்டுள்ளோம் என்று சொல்பவர்கள் தமது ஆழ் சிந்தனையிலே அதனை வைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்

750,000 மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மனித அடிப்படை உரிமையை நிலைநாட்டுதல் என்னும் அத்திவாரத்தோடு தோன்றியது தான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

அது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியானதும், மீண்டும் தமிழ் அரசுக் கட்சியும், தோழமைக் கட்சிகளும் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிச் செயற்பட்டுக் கொண்டிருப்பதும் நமது விடுதலை நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியே ஆகும்70 ஆண்டு காலமாக விடுதலையை இலக்காகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற வரலாற்றைக் கொண்டவர்கள் ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Share this...
Share on Facebook
Facebook

Related posts