தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்க முழுமையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ரீ.எம்.வி.பி.பொதுச்செயலாளர்

க. விஜயரெத்தினம்)
கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  ஆதரிப்பது என்ற முடிவினை எடுத்துள்ளதாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு  சனிக்கிழமை(12)காலை 11.00 மணியளவில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர்சந்திப்பில் கட்சியின் பிரதித்தலைவர்களான கே.யோகவேள்,நா.திரவியம்(ஜெயம்),தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித்,மகளீர் அணித்தலைவி செல்வி மனோகர்,கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் தலைமையிலான பணிக்குழுவினர்,செயற்குழுவினர் மற்றும் பொதுச் சபைக் கூட்டத்தீர்மானத்தின் பிரகாரம்  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர்,தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து  முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து நாட்டுக்கு ஆளுமையுள்ள தலைவரை உருவாக்க வேண்டும் என்ற முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம்.

கிழக்கு தமிழ்மக்களின் நன்மை கருதியும்,கிழக்குத்தமிழர்களின் பாதுகாப்புக்கருதியும்,கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் இருப்பு தமிழர்களின் நிலம், நிருவாகம்,பொருளாதாரம், தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசுக் கட்சி என்ற வகையிலும், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழர்களின் இருப்பை துணைபோன வேண்டிய அரசியல் கட்சி என்ற வகையியிலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்மக்கள் நலன் சார்ந்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இன்று ஒரு தீர்மானம்  முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்  கட்சியானது முழுமையான ஆதரவு வழங்குவதன் என்ற தீர்மானம் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயற்குழுக்கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனை இன்று நாங்கள் பகிரங்கமாக ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்துகின்றோம்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்  கட்சியினால் கிழக்கில்  இருக்கின்ற தமிழ்மக்களின் வலுவாக்க விருத்தி,கல்வி, கலை,கலாச்சார,பொருளாதார ரீதியான விடயங்களை முன்நிறுத்தியுள்ளோம்.இவ்விடயத்தை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்துக் கொள்வதற்கு தேவையான உடன்படிக்கைகளை  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாங்கள் ஜனாதிபதி வேட்பாளருடன்  முழுமையாக பேசி  இணக்கப்பாட்டுடன் வந்துள்ளோம்.எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக தேர்தல்களில் வேலை செய்வோம்.ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ  கிழக்கு மாகாணத்தின் மாகாண சபையில் ஒட்டுமொத்தமாக இருக்கிற மாகாணசபை அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் இருக்கின்றார்.அதே போன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ்மக்கள் போராட்டத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். போராளிகள்,யுத்தத்தால் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மற்றும் சீரழிந்து இருக்கின்ற கல்வி, கலை,கலாசார,பொருளாதார நில ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து விடயங்களிலும் உடன்பாட்டின் அடிப்படையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கிழக்கு மாகாண தமிழ்மக்களின் நன்மைகளை கருத்திற்கொண்டு இத்தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.இவ்விடயமாக நாங்கள் உடன்படிக்கை கைச்சாத்து இருக்கிறோம்.

கடந்த 2008 ஆண்டு முதல் 2012 ஆண்டுவரையும்  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் முதலமைச்சர் பதவியை  எமதுகட்சியின் பெற்று  தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை ஆட்சியை செய்துகாட்டியிருக்கின்றோம். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக முடிந்தளவு தமிழ்மக்களின் இருப்பை பாதுகாத்து வைத்திருந்தோம்.

நாட்டின் ஜனாதிபதியாகவும், வெறுமனமே நான்கு வருடங்கள் நல்லாட்சி என்ற போர்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ,அதன் அனைத்து கட்சிகளும் கொண்டுவந்த நல்லாட்சியும், ஐக்கிய தேசிய கட்சி அரசும் இதுவரையில் கிழக்கிற்கு  மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு வழங்கிருக்கின்றார்களா என்றால்  அது கேள்வி குறியாய் இருக்கிறது.அவர்கள் கொடுத்த வாக்குறுதி 

Share this...
Share on Facebook
Facebook

Related posts