தமிழ் மக்கள் தேர்தலில் போது மொழித் தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது வாக்கினை வழங்க வேண்டும். முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி

தமிழ் மக்கள் எதிர்கொள்ள இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் புத்தி சாதுரியத்துடன் செயற்பட வேண்டிய கடமைப்பாடு இருப்பதாகவும். மும்மொழி தேர்ச்சி பெற்றவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.அப்போதுதான் பாராளுமன்ற பிரதிநிதிகளின் உரைகளை செவிமடுத்து பதில் வழங்க முடியும்.மொழி தேர்ச்சி இல்லாத ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவோமானால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் பயனற்ற செயற்பாடாக அமையும்.இவ்வாறு துறைநீலாவணைக் கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது சகோதர இனத்தவர்கள் எவ்வாறு அரசியல்; செய்கின்றார்கள் என்பதனை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கு தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
வட கிழக்கில் தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் சிலர் உண்மையில் மும்மொழித் தேர்ச்சி மற்றும் அரசியல் அனுபவம் பெற்றவர்கள் இருக்கின்றார்கள்.உண்மையில் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினால் பக்குவமாக ஏனைய பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் செவிமடுத்து கேட்கும் அளவிற்கு தம்மை மாற்றியிருக்கின்றனர்.இவ்வாறு அனுபவம் வாய்ந்தவர்கள் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தேவையானவர்கள் இதில் எதுவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னைப் பொறுத்தமட்டில் கட்சி சாராது தனித்துத் போட்டியிடுவது தொடர்பாக பல பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன்.கடந்த அரசாங்கத்தில் ஒரு அமைப்பாளராக இருந்த கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த வரலாறு இருக்கின்றது. அன்று முதல் இன்று வரைக்கும் எனது அரசியல் பயணம் பொது நோக்கினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தமிழ் மக்கள் முன்னர் விட்ட தவறினை மீண்டும் விடக் கூடாது உண்மையில் அபிவிருத்தி நோக்குடைய அரசியல் சாணாக்கியம் கொண்ட மும்மொழி தேர்ச்சி பெற்ற மக்கள் பிரதி நிதிகளை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும்.அதற்காக கட்சி எனும் பேரில் மட்டு மாவட்டத்தில் பல கட்சிகள் உதயமாகி தமிழ் மக்களின் பிரதி நிதித்துவத்தினை குறைக்க முயற்சிகளை மேற்கொள்வது பொருத்தப்பாடுடையதல்ல உண்மையில் புத்திஜீவிகளின்  ஆலோசனைக்கு அமைவாக தேர்தலில் களமிறங்கி வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.எனத் தெரிவித்தார். 

Share this...
Share on Facebook
Facebook

Related posts