திருக்கோவில் பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தராக திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா பதவியேற்பு

(காரைதீவு  நிருபர் சகா)
 
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா (9) திங்கட்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
 
பொதுநிருவாக அமைச்சு இந்நியமனத்தை வழங்கியது.
 
இப்பதவியேற்புநிகழ்வு  திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. அருகில் உதவி பிரதேசசெயலாளர் கந்தவனம் சதிசேகரனும் உடனிருந்தார்.
 
காரைதீவு பிரதேச செயலகத்தில் பதவிநிலை உத்தியோகத்தராகவிருந்த திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா அண்மையில் நடைபெற்ற சுப்பறாதரத்திற்கான போட்டிப்பரீட்சையில்  சித்தியடைந்தமையையடுத்து நிருவாக உத்தியோகத்தராக பதவியுர்வுபெற்று நியமிக்கப்பட்டார்.
 
கொழும்பில் இருவாரகால பயிற்சியை கடந்த வாரம் நிறைவுசெய்தபின்னர் இன்று தனது கடமையினை புதிய அலுவலகமான திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வமயம் அவரது துணைவர் ஓய்வுநிலை பாடசாலைகள் வேலைகள் பரிசோதகர் த.கணேசராஜாவும் அவரது புத்திரி செல்வி க.தனுசனாவும் புத்திரன் க.கேதீக்சனும் சமுகமளித்திருந்தனர்.
 
பதவியுயர்வு பெற்றுச்செல்லும் திருமதி ஜெயசுந்தரியை காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் வாழ்த்திவழியனுப்பினார்கள்.
 
Share this...
Share on Facebook
Facebook

Related posts