தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு வெளியிடும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது பெறுபேறு 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்..

வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts