தொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பெலேத ரஜமகா விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையின் பல தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு  எதிராக தெளிவான சாட்சியங்கள்  உள்ளமையினால் அவர்களுக்கு மரணதண்டனையே வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் தாக்குதல்கள் குறித்து கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts