நாடு முழுவதும் பணிப் புறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அவ்வகையில், எதிர்வரும் 9ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்சமாக 25,000 ரூபாய் அபராதத்தை அறவிடும் வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டமையை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், அபராதத் தொகை ஊடாக அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், இடது பக்கமாக வாகனத்தை முந்திச் செல்லும் சட்டத்தை நீக்குதல் மற்றும் மேல் மாகாண பேருந்துகளுக்கு ஒரு நிறத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Share this...
Share on Facebook
Facebook

Related posts