பட்ஜட்’ தோற்கடிப்பு. பெண்உறுப்பினர்கள் தமது குழந்தைகளுடன் சபிரதேசசபையின்பையில் பிரசன்னம்.

ஆலையடிவேம்பு பிரதேசசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை
யை ஆலையடிவேம்பு பிரதேசசபைத்தவிசாளர் கே.பேரின்பராசா (9) திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.
 
ஆலையடிவேம்பு பிரதேசசபையில் த.வி.கூட்டணி(ஈரோஸ்) 6பேரும் ஸ்ரீல.சு.கட்சி 5பேரும் ஜ.தே.கட்சி 4பேரும்   அ.இ.த.காங்கிரஸ் ஒருவருமாக மொத்தம் 16உறுப்பினர்கள் உள்ளனர்.
 
தினம் இரு உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.
 
கலந்து  கொண்டிருந்த 14 உறுப்பினர்களும் வரவுசெலவுத்திட்டத்தத்தைப்பற்றி கருத்துரைத்தனர் பெண்உறுப்பினர்களான விஜயராணி மற்றும் சனுஜா ஆகியோர் குழந்தைகளுடன் சபைக்கு சமுகமளித்ததுடன் உரையாற்றியதையும் அவதானிக்கமுடிந்தது.
 
வரவுசெலவுத்திட்டப்பிரேரணை வாக்கெடுப்புக்குவிடப்பட்டது.
உபதவிசாளர் விக்ரர் ஜெகன் ஆளும்கட்சி உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் பட்ஜட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
 
ஆதரவாக தவிசாளர் உள்ளிட்ட 5உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர் ரி.கிரோஜாதரன் நடுநிலையாகவாக்களித்தார்.
எனவே 2020ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 3வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
 
அடுத்த பட்ஜெட் அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறுமெனகூறி தவிசாளர் பேரின்பராசா கூட்டத்தை முடிவுறுத்தினார்.
 
 கிழக்கில் வரவுசெலவுத்திட்டம் பலசபைகளில் வாதப்பிரதிவாதங்களுக்குமத்தியில் தோற்கடிக்கப்பட்டும் சிலசபைகளில் மயிரிழையில் நிறைவேற்றப்பட்டும் இருக்கையில் திருக்கோவில் காரைதீவு போன்ற பிரதேசசபைகளில் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this...
Share on Facebook
Facebook

Related posts