பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதி பொஹவன்தலாவ றாஹுல ஹிமி தேரர் சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம்

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கைத் தீவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட பொஹவன்தலாவ றாஹுல ஹிமி தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) சம்மாந்துறை  பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னானின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சம்மாந்துறை  பிரதேசத்திற்கு வருகை தந்தார். 
 
முழுமையான சுகாதார நடைமுறைகளை பேணி இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை முச்சபை தலைவர்கள், சம்மாந்துறை வர்த்தக சங்க தலைவர், சம்மாந்துறை S.L.C.O அமைப்பின் தலைவர் பொறியியலாளர் ஏ.சி. பஸீல், S.L.C.O அமைப்பின் நிர்வாக குழுவினர் என பலரும் கலந்து கொண்டு நாட்டின் சமகால நிலைகள், மக்களிடம் ஒற்றுமையை வலுப்படுத்த செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
 
Share this...
Share on Facebook
Facebook

Related posts