பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி மட்டக்களப்பில்பாரிய ஆர்ப்பாட்டம்

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி, மட்டக்களப்பு – கிரானில், (19) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிரான் – புலிபாய்ந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடிய சிங்கள, தமிழ் மதகுருமார்களும் பொதுமக்களும் மேற்படி கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு – புனானைப் பகுதியில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவால் நிர்மாணிக்கப்படும் பல்லைக்கழகமானது இஸ்லாமியத் தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகுமென, அவர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.

தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஆரம்பிப்பதாகக் கூறி, தான் தலைவராக நிர்வகிக்கும் ஹிரா நிறுவனத்தினூடாக ஷரியா பல்கலைக்கழகமொன்றை ஆரம்பித்துள்ளார் எனவும் இதை உடனடியாகத் தடை செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரினர்.

“ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவோம்”, “கிழக்கு மாகாண மக்களை, தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்போம்” போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை, இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts