பாடசாலைகளுக்கு மாணவர் வரவு அதிகரிப்பு!

2020இன் மூன்றாம்தவணைவிடுமுறையின் பின்னர் 2021முதலாந்தவணைக்காக ஆரம்பிக்கப்பட்ட அரச பாடசாலைகள் ஒரு வாரகாலத்தை இடரின்றி பூர்த்திசெய்து நேற்று(18)திங்கட்கிழமை இரண்டாம் வாரத்தில் காலடிஎடுத்துவைத்துள்ளது.
 
கடந்தவாரத்தை விட நேற்று கூடுதலான மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுமளித்திருந்தனர்.
 
பாடசாலைகள் ஆரம்பித்துவைத்தமை தொடர்பில் பெற்றோர்களும் புத்திஜீவிகளும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
 
சுகாதார வழிகாட்டலுக்கமைவாக கடந்த(11) திங்கட்கிழமை பெரும்பாலான அரச பாடசாலைகள் புத்தாண்டின் முதலாந்தவணக்காகத் திறக்கப்பட்டமை தெரிந்ததே.
 
அந்தவகையில் சம்மாந்துறை வலயத்திள்ள நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை கணிசமானளவு மாணவர்கள் சமுகமளித்தனர்.
 
அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கைகழுவி முகக்கவசத்துடன் சுகாதாரமுறைப்படி சமுகமளித்திருந்தனர்.
 
பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கன் காலைக்கூட்டத்தில் கொரோனா தொடர்பாக சுகாதார நடைமுறைகள் வழிகாட்டல்கள் தொடர்பாக மாணவர்களுக்கு பூரண விளக்கமளித்தார்.
 
சுகாதாரப்பகுதியனரால் பாடசாலை தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.
Share this...
Share on Facebook
Facebook

Related posts