பிரதி முதல்வர் தெரிவு

கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர்  (12) கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று (12) முதல்வர் ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்ற விசேட மாநகர சபை அமர்விலே ஏகமானதாக இவர்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இவர் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பு செயலாளராகவும்,கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும், முன்னாள் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான  ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளராகவும் பதவி வகிக்கின்றார்.
 
மறைந்த முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இப்பிரதி முதல்வர் தெரிவில் சாய்ந்தமருது அணி, மயில், குதிரை, தமிழ் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வில்லை.
Share this...
Share on Facebook
Facebook

Related posts