புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பு 

 

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பு புதுக்குடியிருப்பு வேணாவில்  பொது நோக்கு மண்டபத்தில் அக்கட்சியின் செயலாளர்  அ.யோகேஸ்வரன் தலைமையில் இன்று 12 இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், தற்போதைய இலங்கை அரசியல் நெருக்கடிகள், தமிழ் தேசிய அரசியலின் வெறுமை நிலை மற்றும் கட்சியின் ஊடாக  மக்கள் அமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவை தொடர்பாகவும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து நாங்கள் தேசிய உரிமைகள் தொடர்பில் மக்கள் பங்குபற்றலுடன் பயணிக்க மக்கள் அனைவரும் உறுதுணை என பதில் அளித்தனர்.

இந்த கலந்துரையாடலில் ஊடக பேச்சாளர் பி. ஜோன்சன் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர்களான க.செந்தூரன், ம.ராஜகுரு ,பொருளாளர் க.வித்தீசன், வடபகுதி செயலாளர் ம.கிருபா, கிழக்கு செயலாளர் சா. கோவியராஜா உட்பட போராளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this...
Share on Facebook
Facebook

Related posts