புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கணவர்களை இழந்த விதவைகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குற்பட்ட கிராமங்களிலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கணவர்களை இழந்த விதவைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி  இலவசமாக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர் ராகுலநாயகி தலைமையில்   பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது
 
இதற்கான நிதியினை மீள்குடியேற்ம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினூடாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் நன்மை ருதி கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. அத்தோடு சமூகவலுவூட்டல் அமைச்சினூடாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாலையார்கட்டு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள பதின்மூன்று இலட்சத்து நானுறு ரூபா பெறுமதியான தெரிவுசெய்யப்பட்ட 44 பயனாளிகளுக்கு கறவைப்புசு, இன்றைய தினம் வளங்கப்பட்டது. 
 
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்,கணக்காளர்,உதவிப்பிரதேச செயலாளர்,சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்,கால்நடை அபிவிருத்தி திணைக்கள வைத்தியர் புனர்வாளழிக்கபட்ட போராழிகள் விதவைகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts